எங்கள் செயல்பாடுகள் (Activities)

ஆலயப்பணிகள் மற்றும் தேர் அலங்கரித்தல், பெரிய வியாழன் , பெரிய வெள்ளி நற்கருணை அலங்கரித்தல் மற்றும் ஆராதனை, பங்கு மக்களுடன் சேர்ந்து தொண்டாற்றுகிறது.

Holy Grotto


கிறிஸ்துவில் ஒன்றித்து வளர்தல் (Encouraging growth in Christ)

ஆக்கபூர்வமான சிந்தனைகளோடு இம்மன்றம், ஆலயம் மற்றும் பங்கு தொடர்பான பல முக்கியமான செயல்பாடுகளில் பங்கெடுத்து வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள்.

குடும்பமுகமாய் செயல்பாடுகள் (Serving as a family)

இதன் உறுப்பினர்கள் ஆண்களாக இருந்தாலும் இவர்களின் குடும்பம் முழுவதுமாய் எல்லா செயல்களிலும் பங்கு பெற்று சிறப்பிப்பது இங்கு மட்டுமே காண முடிகிறது.

பங்களிப்பில் புதிய முயற்சிகள் (Discovering ways to serve others)

சென்ற ஆண்டு சென்னை, கடலூர் வெள்ளத்தால் தத்தளித்தபோது மன்றத்தாரின் குடும்பங்கள் இணைந்து காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை 4000 சப்பாத்திகள் தயாரித்து அதனோடு அத்தியாவசிய தேவைகளையும் இணைத்து 2 வண்டிகளில் ஏற்றி மன்றத்தாரே நேரில் சென்று கொடுத்து வந்தது நெஞ்சை விட்டு நீங்காத நிகழ்வு.

கிறிஸ்துவில் ஒன்றித்த நட்பும் மனமகிழ்வும் (Providing Christian fellowship and Recreation)

ஆலயம் கற்றுத்தந்த ஆன்மீகமும் தொடர வேண்டும். ஆலயத்திற்குள் அரும்பணியும் ஆற்ற வேண்டும்.தம் சொந்த மகிழ்வுக்காக தொடங்கப்பட்ட மன்றம் என்றாலும் பிறர் மனதை மகிழ்வித்து பார்ப்பதில் நாட்டம் கொண்டதற்கு அடித்தளமாக அமைந்தது இறைப்பணியாற்றும் சிறப்பு.

ஆலய பொறுப்புகளை ஏற்று நடத்துதல் (Shouldering Responsibilities of the Parish)

ஆலயம் கற்றுத்தந்த ஆன்மீகமும் தொடர வேண்டும். ஆலயத்திற்குள் அரும்பணியும் ஆற்ற வேண்டும்.தம் சொந்த மகிழ்வுக்காக தொடங்கப்பட்ட மன்றம் என்றாலும் பிறர் மனதை மகிழ்வித்து பார்ப்பதில் நாட்டம் கொண்டதற்கு அடித்தளமாக அமைந்தது இறைப்பணியாற்றும் சிறப்பு.

தேனீக்களின் தெவிட்டாத செயல்கள்


ஆலயப் பணிகளல்லாது பல்வேறு சமுதாயப் பணிகளையும் இம்மன்றம் மேற்கொள்கிறது. உயிர் கொடுக்கும் இரத்த தானம், ஒளி கொடுக்கும் கண் தானம், உயிர் காக்கும் தோல் தானம் மற்றும் வாழும் இச்சமுதாய மக்களின் நலன் காக்க மருத்துவ முகாம்கள் என ஓரி பட்டியலே நீள்கிறது.


ஒளி கொடுக்கும் கண் தானம்!


உடல் உறுப்பு தானம் என்பது தன் உடம்பிலுள்ள உறுப்பையோ அல்லது உறுப்புகளின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்றுகொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, இறந்த பின் தாமாக முன்வந்து தானம் தந்து காப்பாற்றுவதாகும்.

GET MORE INFO

உயிர் கொடுக்கும் இரத்த தானம்!


இரத்த தானம் என்பது மன நிறைவைத்தரும் மனித நேயமிக்க அருஞ்செயலாகும். ஆரோக்கியமான உடல் நிலையிலுள்ள ஆண், பெண் இருபாலரும் 3 -6 மாதங்களுக்கு ஒரு முறை தாமாக முன்வந்து இரத்த தானம் செய்யசெய்து உயிர் காக்கலாம்

GET MORE INFO

உயிர் காக்கும் தோல் தானம்!


தோல் எரிந்துவிட்டால் புண்களின் மூலம் கிருமிகள் எளிதில் பரவி நோயாளிகள் இறக்க நேரிடும். அவர்களுக்கு தானமாய்பெற்ற தோலினை புண்களின் மேல் வைத்து கிருமிகள் மேலும் உடம்பில் பரவாமல் காப்பாற்ற முடிகிறது.

GET MORE INFO