இரத்ததானம் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை

உடல் உறுப்பு தானம் என்பது தன் உடம்பிலுள்ள உறுப்பையோ அல்லது உறுப்புகளின் ஒருபகுதியையோ, மரணவாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து உறுப்புதானம் தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

1. இரத்ததானம் என்பது மனநிறைவைத் தரும் மனிதநேயமிக்க அருஞ்செயலாகும்
2. மனிதனின் இரத்தம்ஏ, பி, ஏபி மற்றும் ஓ என்று நான்கு பிரிவுகளாகும். அவற்றில் பாசிட்டிவ் என்றும் நெகட்டிவ் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
3. 18-60 வயதுக்குட்பட்ட நல்ல உடல்நிலையிலுள்ள ஆண், பெண் இருபாலரும் 3 -6 மாதங்களுக்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம்.
4. உடல் எடை 49 கிலோவிற்கு மேல் இருக்கவேண்டும்.
5. இரத்தத்தின் அளவு (ஹீமோகுளோபின்) 12.5g/dLக்கு மேல் இருத்தல் வேண்டும்.
6. உணவு உட்கொண்ட 3 மணிநேரத்திற்குள் இரத்ததானம் செய்யலாம்.
7. இரத்ததானம் செய்வதற்கு முதல்நாள் இரவு (6-8 மணிநேரம்) நன்றாக தூங்கியிருக்க வேண்டும்.
8. நல்ல உடல் ஆரோக்யமுள்ளயாவரும் 3 மாதங்களுக்கு (90 நாட்கள்) ஒரு முறை இரத்ததானம் செய்யலாம்.
9. இரத்ததானம் செய்வதால் நம் உடல் பலவீனம்அடையாது. இரத்ததானம் செய்தபின் நம் அன்றாட பணிகளை எவ்வித சிரமுமின்றி வழக்கம் போல் செய்யலாம்.
10. இரத்ததானம் செய்பவருக்கு மூளை மற்றும் இருதய அடைப்புகள் குறைவாகவே ஏற்படுகின்றன என்பது மருத்துவ ஆராய்ச்சியில் அறியப்பட்ட உண்மையாகும்.
11. சாதாரணகாய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கு மாத்திரைகள் ஏதேனும் உட்கொண்டால் 24 மணிநேரம் கழிந்த பின்னரே இரத்ததானம் செய்ய இயலும்.
12. மேலும் சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவற்றுக்கு Antibiotic எனப்படும் மருந்துகள் ஏதேனும்உட்கொண்டிருந்தால் 15 நாட்கள் கழிந்த பின்னரே இரத்ததானம் செய்ய இயலும்.
13. தொடர்ந்து இரத்ததானம் செய்வதன் மூலம் நெடுநாள் வாழ வாய்ப்புண்டு.
14. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கடைசியாக புகைபிடித்ததிலிருந்து 2 மணி நேரம் கழிந்த பின்னரே இரத்ததானம் செய்ய இயலும்.
15. மது அருந்தியிருந்தால் 24 மணி நேரம் கழிந்த பின்னரே இரத்ததானம் செய்ய இயலும்.
16. Vaccination எனப்படும் தடுப்பூசி போடப்பட்டிடுத்தால், 15 நாட்களுக்கு பின்னரே இரத்ததானம் செய்ய இயலும்.
17. டைபாயிடு, மலேரியா, டெங்குகாய்ச்சல், சிக்கன்குனியா மற்றும் மஞ்சள் கமாலை போன்றநோய்கள் எதாவது வந்திருந்தால் ஒருவருடத்திற்கு பின்னரே இரத்ததானம் செய்ய இயலும்.
18. நாய்கடிக்கு ஏதாவது ஊசி போடப்பட்டிருந்தால் ஒரு வருடத்திற்கு பின்னரே இரத்ததானம் செய்ய இயலும்.
19. அறுவை சிகிச்சை ஏதேனும் செய்திருந்தால் ஒரு வருடத்திற்கு பின்னரே இரத்ததானம் செய்ய இயலும்.
20. ஆஸ்துமா, சரும(தோல்) நோய்கள், இரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் இரத்ததானம் செய்ய இயலாது.
21. உங்களின் இரத்தவகை என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அந்த தகவலை உங்கள் உடமைகளோடு வைத்திருங்கள். உங்களின் உயிரை காக்க கூடிய தகவல்அது.

என் இரத்ததானம்செய்யவேண்டும்?
இரத்ததானம் என்பது நம் உணர்வை வெளிப்படுத்த சிறந்த வழி. நாம் ஒரு முறை கொடுக்கும் இரத்ததானம் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நோயாளிகளைக் காப்பாற்றும்.
நமது இரத்தம் பல்வேறு வகையான கூறுகளை உள்ளடக்கியதாகும். நம் இரத்தத்தில் சிகப்பு மற்றும் வெள்ளை அணுக்கள், குருதிவட்டு (நுண்ணியகுருதி அணு)( Platelets) , ஊனீர் (Plasma), (குருதியின் நிறமற்ற நீர்மக்கூற்று), ஊனீர்புரதம்(Plasma Proteins), ஆகியவை அடங்கியுள்ளது. நாம் வழங்கிய ஒரு யூனிட் இரத்தத்தில் மேற்கூறிய ஒவ்வொரு கூறுகளையும் தனித்தனியாக பிரித்தெடுத்து குறிப்பிட்ட நோயாளிக்குத் தேவைபடும் பகுதிகள் அல்லது கூறுகள் அவருக்கு ஏற்றப்படும். ஆகவே ஒரு யூனிட் இரத்தத்தை பலருக்கும் பிரித்து கொடுக்க முடியும்.

இரத்ததானம் தேவைப்படும் காரணங்கள்
நோய்வாய்ப்படுதல் அல்லது விபத்தினால் ஏற்படும் இரத்த இழப்பு இருதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகள், தீயினால் ஏற்படும் காயங்கள், அனீமியா போன்ற நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் பிரசவத்தின்போது பிறந்த குழந்தையின் இரத்தத்தை மாற்ற குழந்தைகளுக்கு ஏற்படும் தலஸ்அமியா(Thalassemia)> மோபிலியாHaemophilia (இரத்தப்போக்கு) , லூக்கிமியாLeukemia (இரத்தபுற்றுநோய்)