கண்தானம் - ஒருவிளக்கம்

உடல் உறுப்பு தானம் என்பது தன் உடம்பிலுள்ள உறுப்பையோ அல்லது உறுப்புகளின் ஒருபகுதியையோ, மரணவாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து உறுப்புதானம் தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன?
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும்.
1.ஒருவர் உயிரோடு இருக்கும் போது தருவது.
2.ஒருவர் இறந்தபின் தருவது.

உயிரோடுஇருக்கும்போதுதானமாகதரக்கூடியஉறுப்புகள்என்னென்ன?
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரைஈரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, இரத்தம் ஆகியவை.

இறந்தபின்தானமாகதரக்கூடியஉறுப்புகள்என்னென்ன?
இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண்விழித்திரை (கார்னியா)

யார்யார்உறுப்புகளைதானமாகதரமுடியும்?
நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், இரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், புற்றுநோய், இதயநோய், பால்வினைநோய், ஹெபடைடிஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும்போது தானம் செய்ய தகுதியானவர்கள்.

உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?
18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.

உயிருடன் இருக்கும்போது உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?
பொதுவாக தானம் செய்பவருக்கு எந்த ஆபத்தும் வருவதில்லை. இரண்டு சிறுநீரகங்கள் உள்ளவர்கள் ஒன்றை தானமாக தரும் போது இரண்டு உறுப்புகள் செய்யவேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அது அளவில் சற்று பெரியதாகிறது. ஆனால் நாளடைவில் அது தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர் தன் வேலையை தானாகவே செய்துகொள்ளலாம். பாதிப்பு இல்லாத கல்லீரலின் ஒரு பகுதியை தானம் கொடுத்த பின் அது தானாகவே வளர்ந்துவிடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சரியாக வேலை செய்ய தடையில்லை..

வேறு என்னென்ன உறுப்புகள் தானமாக தரமுடியும்?
கண்ணின் விழித்திரை (கார்னியா), எலும்பு, எலும்பின்மஜ்ஜை, இரத்தநாளங்கள், இதயத்திலுள்ள வால்வுகள், கணவன், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

சீராட்டி பாராட்டி வளர்த்த நம் உடல் இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழுபூச்சிகள் அரித்து வீணாகி போகவேண்டுமா?
மாறாக, பிறந்து, வாழ்ந்து இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகில் பலரின் உடம்பின் மூலம் வாழலாம். ஆகவே இறந்த பின்னரும் இவ்வுலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ளபோதே,நம் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கான அடையாள அட்டையை வாங்கி வைத்துக்கொண்டால் நாம் நிச்சயமாக என்றும் வாழலாம்.

கண்தானம் செய்வதற்கு சில முக்கியகுறிப்புகள்
கண்தானம் செய்வதற்கு வயது, ஜாதி, இனம், மதம், மொழி, ஆன், பெண், பாகுபாடு எதுவும் கிடையாது.
ஒருவர் மரணமடைந்த 6 மணி நேரத்திற்குள் அவரது கண்களை தானமாக எடுத்துவிட வேண்டும்.
இரத்தஅழுத்த நோய், சர்க்கரை நோய், கண்ணாடி அணிந்தவர்கள், கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்களும் கண்தானம் செய்யலாம்.