எங்களைப்பற்றி (About Us)
1976-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் நாள் அன்று அப்போது கோவை, காந்திபுரம் புனித பாத்திமா ஆலயப்பங்கு தந்தை அருட்தந்தை ஏசுதாஸ் அடிகளார் அவர்கள் முன்னிலையில், அன்றைய கப்புச்சின் மாநில அதிபராக இருந்த அருட்தந்தை ஜோனத்தான் அடிகளார் தலைமையேற்க 12 இளம் வாலிபர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தம் சொந்த மகிழ்வுக்காக தொடங்கப்பட்ட மன்றம் என்றாலும் பிறர் மனதை மகிழ்வித்து பார்ப்பதில் நாட்டம் கொண்டது. அதற்கு அடித்தளமாக அமைந்தது இறைப்பணி. இம்மன்றத்தை தொடங்கி வைத்த அருட்தந்தையே இறைப்பணியையும் தொடங்கி வைத்தார். பெரிய வியாழன் அன்று நடைபெறும் ஒளி ஒலி காட்சியில் இவர்களின் பங்களிப்பு உண்டு .பின் 1977 முதல் அன்னையின் தேர் விழாவின் போது தேர் அலங்காரம் செய்யும் பணியையும் ஏற்றதோடு இன்றும் இப்பணியைத் தொடர்கிறது இம்மன்றம்.கிறிஸ்துமஸ் குடில் அலங்காரம் செய்தல், கிறிஸ்துமஸ் கேரல்ஸ் செல்லுதல், மறைபரப்பு ஞாயிறன்று உணவகங்கள் அமைத்து பொருள் ஈட்டுதல் போன்ற பல செயல்பாடுகளை செவ்வனே செய்கின்றனர் .
ஆர்வமிக்க மன்றம்
(Enthusiastic Group)
மன்றத்தார் வேறு வேறு வேலை, படிப்பு, பின்புலம் மொழி போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் FRC என்னும் குடையின் கீழ் தொண்டாற்றுவதிலும், பணிகளை மேற்கொள்வதிலும் ஒன்றுபடுவது இதன் சிறப்பு.
பெண் உறுப்பினர்கள்
(Active Members)
பெண்கள் தெரிந்த நபர்களோடு பழகும்போது சகோதர உணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் ஒருசேரப் பெறுகின்றனர்.இதனால் பெண்கள் தங்கள் பங்களிப்பை குடும்பத்தோடு இனணந்து கொடுக்க முடிகிறது.
குழந்தைகளின் பங்கு
(Children @ FRC)
குழந்தைகள் தனக்கு தெரிந்த, அறிந்த மற்றும் பல குடும்பங்களோடு இணைந்து செயலாற்றும் போதும் விளையாடும் போதும், தனிமை உணர்வைத் தவிர்த்து தன் நட்பு வட்டத்தைப் பெருக்கி்க் கொள்கின்றனர்.
குடும்பமுகமாய் செயல்பாடுகள் (Serving as a family)
ஆக்கபூர்வமான சிந்தனைகளோடு இம்மன்றம், ஆலயம் மற்றும் பங்கு தொடர்பான பல முக்கியமான செயல்பாடுகளில் பங்கெடுத்து வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள்.
குடும்பமுகமாய் செயல்பாடுகள் (Serving as a family)
இதன் உறுப்பினர்கள் ஆண்களாக இருந்தாலும் இவர்களின் குடும்பம் முழுவதுமாய் எல்லா செயல்களிலும் பங்கு பெற்று சிறப்பிப்பது இங்கு மட்டுமே காண முடிகிறது.
பங்களிப்பில் புதிய முயற்சிகள் (Discovering ways to serve others)
சென்ற ஆண்டு சென்னை, கடலூர் வெள்ளத்தால் தத்தளித்தபோது மன்றத்தாரின் குடும்பங்கள் இணைந்து காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை 4000 சப்பாத்திகள் தயாரித்து அதனோடு அத்தியாவசிய தேவைகளையும் இணைத்து 2 வண்டிகளில் ஏற்றி மன்றத்தாரே நேரில் சென்று கொடுத்து வந்தது நெஞ்சை விட்டு நீங்காத நிகழ்வு.
கிறிஸ்துவில் ஒன்றித்த நட்பும் மனமகிழ்வும் (Providing Christian fellowship and Recreation)
ஆலயம் கற்றுத்தந்த ஆன்மீகமும் தொடர வேண்டும். ஆலயத்திற்குள் அரும்பணியும் ஆற்ற வேண்டும்.தம் சொந்த மகிழ்வுக்காக தொடங்கப்பட்ட மன்றம் என்றாலும் பிறர் மனதை மகிழ்வித்து பார்ப்பதில் நாட்டம் கொண்டதற்கு அடித்தளமாக அமைந்தது இறைப்பணியாற்றும் சிறப்பு.
ஆலய பொறுப்புகளை ஏற்று நடத்துதல் (Shouldering Responsibilities of the Parish)
ஆலயம் கற்றுத்தந்த ஆன்மீகமும் தொடர வேண்டும். ஆலயத்திற்குள் அரும்பணியும் ஆற்ற வேண்டும்.தம் சொந்த மகிழ்வுக்காக தொடங்கப்பட்ட மன்றம் என்றாலும் பிறர் மனதை மகிழ்வித்து பார்ப்பதில் நாட்டம் கொண்டதற்கு அடித்தளமாக அமைந்தது இறைப்பணியாற்றும் சிறப்பு.

Our Stats
முழுமையான வருடங்கள்
Quality Years
ஊக்கமிகுந்த உறுப்பினர்கள்
Active Members
ஆதரவான குழு
Supportive Team
முடிக்கப்பட்ட பணிகள்
Tasks accomplished
Our Activities
Contact Us
Fatima Recreation Club
Our Lady of fatima Church
Dr. Radhakrishna St, Gandhipuram, Coimbatore-641012
contact@frc.in
support@frc.in
Phone Numbers
0800 4521 800 50
0450 5896 625 16