தோற்றம் (Birth)
1976-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் நாள் அன்று அப்போது கோவை, காந்திபுரம் புனித பாத்திமா ஆலயப்பங்கு தந்தை அருட்தந்தை ஏசுதாஸ் அடிகளார் அவர்கள் முன்னிலையில், அன்றைய கப்புச்சின் மாநில அதிபராக இருந்த அருட்தந்தை ஜோனத்தான் அடிகளார் தலைமையேற்க 12 இளம் வாலிபர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
ஆர்வமிக்க உறுப்பினர்கள்
(Enthusiastic Group)
மன்றத்தார் வேறு வேறு வேலை, படிப்பு, பின்புலம் மொழி போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் FRC என்னும் மாபெரும் குடையின் கீழ் தொண்டாற்றுவதிலும், பணிகளை மேற் கொள்வதிலும் ஒரே குழுவாக ஒன்றுபட்டு செயல்படுவது இதன் சிறப்பு.
பெண் உறுப்பினர்கள்
Active Lady Members
பெண்கள் தெரிந்த நபர்களோடு பழகும்போது சகோதர உணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் ஒருசேரப் பெறுகின்றனர். இதனால் பெண்கள் தங்கள் பங்களிப்பை மற்ற உறுப்பினர்களின் குடும்பங்களோடும் இனணந்து கொடுக்க முடிகிறது.
குழந்தைகளின் பங்கு
Children@ FRC
குழந்தைகள் தங்கள் குடும்பம் தவிர தனக்கு தெரிந்த, அறிந்த மற்றும் பல குடும்பங்களோடு இணைந்து செயலாற்றும் போதும் விளையாடும் போதும், தனிமை உணர்வை விட்டு தன் நட்பு வட்டத்தைப் பெருக்கிக்கொள்ளவும் பங்களிக்கவும் முடிகிறது
எங்களைப் பற்றி (About Us)
We Are
FRC Members
தம் சொந்த மகிழ்வுக்காக தொடங்கப்பட்ட மன்றம் என்றாலும் பிறர் மனதை மகிழ்வித்து பார்ப்பதில் நாட்டம் கொண்டது. அதற்கு அடித்தளமாக அமைந்தது இறைப்பணி. இம்மன்றத்தை தொடங்கி வைத்த அருட்தந்தையே இறைப்பணியையும் தொடங்கி வைத்தார். பெரிய வியாழன் அன்று நடைபெறும் ஒளி ஒலி காட்சியில் இவர்களின் பங்களிப்பு உண்டு.
பின் 1977 முதல் அன்னையின் தேர் விழாவின் போது தேர் அலங்காரம் செய்யும் பணியையும் ஏற்றதோடு இன்றும் இப்பணியைத் தொடர்கிறது இம்மன்றம்.கிறிஸ்துமஸ் குடில் அலங்காரம் செய்தல், கிறிஸ்துமஸ் கேரல்ஸ் செல்லுதல், மறைபரப்பு ஞாயிறன்று உணவகங்கள் அமைத்து பொருள் ஈட்டுதல் போன்ற பல செயல்பாடுகளை செவ்வனே செய்கின்றனர் .
மனங்களில் மணம் பரப்பும் மனமகிழ் மன்றம் FRC (Fathima Recreation Club)
பசிக்காய் பழம் தேடிய காகம், பழத்தின் ருசியைக்கண்டவுடன் அமர்ந்து, ருசித்து, ரசித்து,உண்டு பசியாறி, அதன் விதையை நிலத்தில் பதித்துச்சென்றது. விழுந்த விதை முளைத்து, துளிர்த்து, நிலைத்து, கிளைத்து இன்று வேரூன்றி ஆகா, என்ன ருசி, இதிலிருந்து இன்னொரு பழத்தை பறித்து, ருசித்து, பின் விதைத்து பெருக்கலாமே! என எண்ண வைத்தது. ஆம் அந்த பசிக்காய் பலமெனும் நட்பைத்தேடிய காகங்கள் தாம் இம்மனமகிழ் மன்றத்தார். இவர்களின் இனிமை மிகு பயணம் இதனைப் படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாய், சுவை மிகுந்ததாய் இருப்பதோடு செயலைத் தூண்டுவதாயும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. சின்னஞ்சிறுவர்கள் பலிபீடத்தைச் சுற்றி சுற்றி வந்து இறைபணியாற்றி வந்தனர் . எஞ்சிய நேரத்தில் ஆலய வளாகத்தில் விளையாடி மகிழ்ந்தனர். பீட சிறுவர்களாக இருக்கும் வயதைக் கடந்தவுடன், ஆலயம் கற்றுத்தந்த ஆன்மீகமும் தொடர வேண்டும்; ஆலயத்திற்குள் அரும்பணியும் ஆற்ற வேண்டும்;. இச்சூழலில் 1976-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் நாள் அன்று அப்போது கோவை, காந்திபுரம் புனித பாத்திமா ஆலயப்பங்கு தந்தை அருட்தந்தை ஏசுதாஸ் அடிகளார் அவர்கள் முன்னிலையில், அன்றைய கப்புச்சின் மாநில அதிபராக இருந்த அருட்தந்தை ஜோனத்தான் அடிகளார் தலைமையேற்க 12 இளம் வாலிபர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டதுFRC ( Fathima Recreation Club) மனமகிழ் மன்றம் இன்று 40 ஆண்டுகளைக்கடந்து அடுத்த தலைமுறையின் நுழைவோடு இம்மமன்றப் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
இறைவாக்கு வாழ்வாக இணைந்த செயல்பாடு
மத்தேயு நற்செய்தி 25:35 - 40 இறைவார்த்திகளில் கூறப்பட்டுள்ளது போல சிறையில் இருப்போரை காண்பதும், பசித்திருப்போர்க்கு உணவளிப்பதும், நோயுற்றவர்களை காண்பதும் இறைவனுக்கு செய்யும் சேவை என்பதால் குடும்பமாக மன்றத்தார் அனைவரும் இணைந்து இப்பணிகளை ஆண்டுதோறும் அயராது செய்து வருகின்றனர். இதனால் பெண்கள் தங்கள் பங்களிப்பை குடும்பத்தோடு இனைந்து கொடுக்க முடிகிறது. குழந்தைகளும் தம் இளம் பருவத்தில் இருந்தே தம் தாய் தந்தையர் இணைந்து பணியாற்றுவதை காணும்போது தம் இளம் பருவத்திலிருந்தே தாங்களும் தானாகவே அந்த உதவும் இறைவார்த்தையை வாழ்வாக்கும் நற்பண்பினை பெறுகின்றனர். ஆயிரம் வார்த்தைகளை விட ஒற்றை சொல் வலிமை பெற்றதன்றோ? அனைத்திற்கும் உச்சமாக சென்ற ஆண்டு சென்னை> கடலூர் வெள்ளத்தால் தத்தளித்தபோது மன்றத்தாரின் குடும்பங்கள் இணைந்து காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை 4000 சப்பாத்திகள் தயாரித்து அதனோடு அத்தியாவசிய தேவைகளையும் இணைத்து 2 வண்டிகளில் ஏற்றி மன்றத்தாரே நேரில் சென்று கொடுத்து வந்தது நெஞ்சை விட்டு நீங்காத நிகழ்வு.
இறைபணியில் இணைந்த இளைஞர்கள்
தன் சொந்த மகிழ்வுக்காக தொடங்கப்பட்ட மன்றம் என்றாலும் பிறர் மனதை மகிழ்வித்து பார்ப்பதில் நாட்டம் கொண்டது. அதற்கு அடித்தளமாக அமைந்தது இறைப்பணி. இம்மன்றத்தை தொடங்கி வைத்த அருட்தந்தையே இறைப்பணியையும் தொடங்கி வைத்தார். பெரிய வியாழன் அன்று நடைபெறும் ஒளி ஒலி காட்சியில் இவ்விளைஞர்களின் பங்களிப்பு, 1977 முதல் அன்னையின் விழாவின் போது தேர் அலங்காரம் செய்யும் பணி ஆகியவை இன்றும் தொடர்கிறது. கிறிஸ்துமஸ் குடில் அலங்காரம், கிறிஸ்துமஸ் கேரல்ஸ் செல்லுதல், மறைபரப்பங்களிப்பு ஞாயிறன்று உணவகங்கள் அமைத்து பொருள் ஈட்டி பங்கிற்கு அளித்தல், பெரிய வியாழனன்று மறைமாவட்டமே வியந்து நோக்கி இணைந்து ஆராதிக்கும் அளவிற்கு திவ்விய நற்கருணை பேழை அலங்காரமும் ஆராதனையும் மேற்கொள்ளுதல் போன்றவை இம்மன்றத்தின் இதர பணிகள்.
குடும்பமாய் பணியாற்றும் கூட்டு முயற்சி
இதனை படித்துக்கொண்டிருப்பவர்களின் மனங்களில் ஏனிந்த மன்றம் போல் வேறு எங்கும் இல்லையோ? அப்படி என்ன இதன் சிறப்பு? என்ற வினாக்கள் எழுந்து விடை தேடுவது இயற்கையே. இம்மன்றத்திற்கு ஒரு மிகப்பெரிய சிறப்பு உண்டு. அது யாதெனில் இதன் உறுப்பினர்கள் ஆண்களாக இருக்கலாம். அவை வருகை பதிவேட்டில் எழுத மட்டுமே. மெய்யாக இதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு உறுப்பினரின் குடும்ப நபர்களுமே. இது போல் குடும்பமாக இணைந்து குழுவாக செயல்படுவதை நீங்கள் எங்கும் காண முடியாது. கூட்டுக்குடும்பம் குறைந்து போன இக்காலத்தில் இம்மன்றத்தினர் திருவிழாக்கள், திருயாத்திரைகள், இன்பச்சுற்றுலா, ஆசிரமங்கள்-மருத்துவமனைகள் சந்தித்தல் சிறப்பு உபவாசக்கூடங்கள், ஜெபவழிபாடுகள், ஆலயப்பணிகள், ஆராதனைகள் போன்ற ஆலயத்தின் அனைத்து பணிகளிலும் குடும்பமாக ஈடுபடுவதே இம்மன்றத்தின் சிறப்பு.
எங்கள் செயல்பாடுகள் (Activities)
கிறிஸ்துவில் ஒன்றித்து வளர்தல் (Encouraging growth in Christ)
ஆக்கபூர்வமான சிந்தனைகளோடு இம்மன்றம், ஆலயம் மற்றும் பங்கு தொடர்பான பல முக்கியமான செயல்பாடுகளில் பங்கெடுத்து வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள்.
குடும்பமுகமாய் செயல்பாடுகள் (Serving as a family)
இதன் உறுப்பினர்கள் ஆண்களாக இருந்தாலும் இவர்களின் குடும்பம் முழுவதுமாய் எல்லா செயல்களிலும் பங்கு பெற்று சிறப்பிப்பது இங்கு மட்டுமே காண முடிகிறது.
பங்களிப்பில் புதிய முயற்சிகள் (Discovering ways to serve others)
சென்ற ஆண்டு சென்னை, கடலூர் வெள்ளத்தால் தத்தளித்தபோது மன்றத்தாரின் குடும்பங்கள் இணைந்து காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை 4000 சப்பாத்திகள் தயாரித்து அதனோடு அத்தியாவசிய தேவைகளையும் இணைத்து 2 வண்டிகளில் ஏற்றி மன்றத்தாரே நேரில் சென்று கொடுத்து வந்தது நெஞ்சை விட்டு நீங்காத நிகழ்வு.
கிறிஸ்துவில் ஒன்றித்த நட்பும் மனமகிழ்வும் (Providing Christian fellowship and Recreation)
ஆலயம் கற்றுத்தந்த ஆன்மீகமும் தொடர வேண்டும். ஆலயத்திற்குள் அரும்பணியும் ஆற்ற வேண்டும்.தம் சொந்த மகிழ்வுக்காக தொடங்கப்பட்ட மன்றம் என்றாலும் பிறர் மனதை மகிழ்வித்து பார்ப்பதில் நாட்டம் கொண்டதற்கு அடித்தளமாக அமைந்தது இறைப்பணியாற்றும் சிறப்பு.
ஆலய பொறுப்புகளை ஏற்று நடத்துதல் (Shouldering Responsibilities of the Parish)
ஆலயம் கற்றுத்தந்த ஆன்மீகமும் தொடர வேண்டும். ஆலயத்திற்குள் அரும்பணியும் ஆற்ற வேண்டும்.தம் சொந்த மகிழ்வுக்காக தொடங்கப்பட்ட மன்றம் என்றாலும் பிறர் மனதை மகிழ்வித்து பார்ப்பதில் நாட்டம் கொண்டதற்கு அடித்தளமாக அமைந்தது இறைப்பணியாற்றும் சிறப்பு.
தேனீக்களின் தெவிட்டாத செயல்கள்
ஆலயப் பணிகளல்லாது பல்வேறு சமுதாயப் பணிகளையும் இம்மன்றம் மேற்கொள்கிறது. உயிர் கொடுக்கும் இரத்த தானம், ஒளி கொடுக்கும் கண் தானம், உயிர் காக்கும் தோல் தானம் மற்றும் வாழும் இச்சமுதாய மக்களின் நலன் காக்க மருத்துவ முகாம்கள் என ஓரி பட்டியலே நீள்கிறது.
ஒளி கொடுக்கும் கண் தானம்!
உடல் உறுப்பு தானம் என்பது தன் உடம்பிலுள்ள உறுப்பையோ அல்லது உறுப்புகளின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்றுகொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, இறந்த பின் தாமாக முன்வந்து தானம் தந்து காப்பாற்றுவதாகும்.
GET MORE INFOஉயிர் கொடுக்கும் இரத்த தானம்!
இரத்த தானம் என்பது மன நிறைவைத்தரும் மனித நேயமிக்க அருஞ்செயலாகும். ஆரோக்கியமான உடல் நிலையிலுள்ள ஆண், பெண் இருபாலரும் 3 -6 மாதங்களுக்கு ஒரு முறை தாமாக முன்வந்து இரத்த தானம் செய்யலாம்.
GET MORE INFOஉயிர் காக்கும் தோல் தானம்!
தோல் எரிந்துவிட்டால் புண்களின் மூலம் கிருமிகள் எளிதில் பரவி நோயாளிகள் இறக்க நேரிடும். அவர்களுக்கு தானமாய்பெற்ற தோலினை புண்களின் மேல் வைத்து கிருமிகள் மேலும் உடம்பில் பரவாமல் காப்பாற்ற முடிகிறது.
GET MORE INFOOur Stats
முழுமையான வருடங்கள்
Quality Years
ஊக்கமிகுந்த உறுப்பினர்கள்
Active Members
ஆதரவான குழு
Supportive Team
முடிக்கப்பட்ட பணிகள்
Tasks Accomplished